12
Feb
இயக்கம் - கார்த்திக்சுப்புராஜ் நடிகர்கள் - விக்ரம், துருவ், பாபி சிம்ஹா இரண்டு சிந்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை தான் மகான். தன்னுடைய சுய விருப்பத்தின் படி ஒரு வாழ விருப்பபடும் நாயகன், அதனால் தன் குடும்பத்தின் கோபத்திற்கு ஆளாகி, தனியாளாக மாற நேரிடுகிறது. அதன் பின் அவனது வாழ்கையில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. ஆழமான கதையோட்டத்தில் உருவாக்கபட்ட திரைக்கதை. காந்திய சிந்தாந்தங்களில் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பக்கம், எனக்கு விருப்பமான தவறுகள் நிறைந்த வாழ்கையை வாழவிடாமல் என்னை தடுக்காதீர்கள் என்ற சுதந்திரம் ஒரு பக்கம் என இருமுனைகளின் போராட்டத்தை கதைகளமாக எடுத்ததற்கு இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும். படத்தின் அடிநாதம் அழகாய் அமைந்திருந்தாலும், திரைக்கதையில் கோட்டைவிட்டு இருக்கிறார்கள் படக்குழு. பல காட்சிகள் வெறுமனே ஓடுவது போல் உள்ளது. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஆழமான தேவை இருக்கிறது, ஆனால் அது எதுவும் திரையில் வரவில்லை. மிகப்பெரிய சிந்தாந்த போராட்டமாக…