‘மாவீரன்’ படத்தின் வெற்றிக்கு பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது!!

‘மாவீரன்’ படத்தின் வெற்றிக்கு பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது!!

  சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேர்பை பெற்றுள்ளது.  இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மடோனா அஸ்வின், "இந்தப் படத்தின் கூட்டணி அமைத்து, வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்தத் தயாரிப்பாளர் அருணுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் கதை சொன்னதிலிருந்து படம் முடியும் வரை எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் முழு உழைப்பையும் கொடுத்த சிவகார்த்திகேயன் சார் மற்றும் படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கேட்டதும் உடனே ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், ரவி தேஜா சார், அற்புதமான நடிகை சரிதா மேம், யோகி பாபு சார், ஆர்ட் டிரைக்டர், மியூசிக் டிரைக்டர், யானிக் பென் மாஸ்டர் என படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் அவ்வளவு…
Read More
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட இயக்குனர் மிஷ்கின்! மாவீரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட இயக்குனர் மிஷ்கின்! மாவீரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதே தினத்தில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “மடோன் எடுத்த படம் அனைத்தும் கடுமையான கதைகள். ஆனால் அதை ஜனரஞ்சகமாக மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்து கொண்டு பணியாற்றி உள்ளார். படப்பிடிப்பில் ஒரு நாள் கூட அவர் யாரையும் திட்டியது இல்லை. ஆனால், அனைவரையும் வேலை வாங்குவதில் நல்ல திறமையாளர். நான் இயல்பாக நடிப்பதை போல் இந்த படம் இருக்காது, வேறு பாதையில் நடித்து உள்ளேன். இந்த படம்…
Read More
பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் டைரக்ட் செய்யறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கிறாய்ங்க. விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருது. இந்த படத்தின் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சில கருத்து வேருபாடுகள் இருந்து வந்ததாக சில வதந்திகளும் வெளியானது,தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் , மேலும் படம் நன்றாக வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்
Read More
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் தாமதமாக வாய்ப்புள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் தாமதமாக வாய்ப்புள்ளது

சிவகார்த்திகேயன் ரசிகர்கள அடுத்து பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மாவீரன். மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதத்தில் வர இருப்பதால் தான் மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்ற இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.  
Read More