ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

  நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய மகளும், நடிகர் தனுஷ் உடைய மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்  தமிழில் ஒரு இயக்குனராக இருக்கிறார். தனுஷ் நடிப்பில் 2012-ல் 3 திரைப்படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் “ வை ராஜா வை “ திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களையும், பல முக்கிய படங்களையும் தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தினை பற்றி அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ்  இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டிற்கு பிறகு, ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக கலமிறங்கும் படம். முக்கிய படங்களையும், முன்னணி நடிகர்களையும் வைத்து, படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், இப்போது ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்துள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய…
Read More
சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,” கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோக மயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்தது இல்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார். இதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் வாக்குறுதி அளித்தபடி வடிவேலுவின்…
Read More
Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர். இப்படத்தினை LYCA Productions நிறுவனம் Sivakarthikeyan Productions உடன் இணைந்து இபடத்தினை தயாரிக்கிறது. கல்லூரியை பின்னணி களமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படம் உருவாகிறது. நடிகை பிரியங்கா அருள் மோகன் “டாக்டர்” படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இப்படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். நடிகர்கள் SJ சூர்யா, சமுத்திரகனி, விஜய் டீவி புகழ் ஷிவாங்கி, RJ விஜய், முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பல பிரபல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தினை இயக்க இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். LYCA Productions சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன்…
Read More
லைகா-வை நம்பி தமிழில் கால் பதிக்கும் மகேஷ் பாபு தேறுவாரா?

லைகா-வை நம்பி தமிழில் கால் பதிக்கும் மகேஷ் பாபு தேறுவாரா?

ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்… இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி… ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்…சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு…. அதை பார்ப்பதற்கு முன்…! பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர். சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ். எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா…. ? இந்த  மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்தான்… ஆனால் தற்போது தமிழில் அறிமுகம்…
Read More
நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’!

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’!

நடிகை நயன்தாரா ‘கோலமாவு கோகிலா’ என்னும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்தப்படம் பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். கோகோ என சப்-டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். நயன்தாரா தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் கோகோ படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் 'சைரா' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பெரிய படங்களில் முன்னணி நாயகியாகவும், சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிப்பதற்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் தமிழில் நடித்துள்ள அறம், கொலையுதிர் காலம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. https://www.youtube.com/watch?v=oUibKT3wZzs&feature=youtu.be
Read More
‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்:  லைகா  தகவல்

‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்: லைகா தகவல்

2.0' படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் விரைவில் துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Follow Raju Mahalingam @rajumahalingam 2.0 promotion kick starts......#2point0 1:04 PM - 24 Jun 2017 அந்த வீடியோ பதிவில், '2.0' படத்தை விளம்பரப்படுத்த விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான 3டி தொழில்நுட்பத்திலான படம் என்பதால், கிராபிக்ஸ்…
Read More