26
Sep
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா NJ தான் அவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா NJ, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா NJ எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது. மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா NJ கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி…