குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

நம்மில் பலரும் மெரினா பீச் அல்லது பொருட்காட்சி போயிருப்போம். போன இடத்தில் வாங்கிய சுண்டல் அல்லது துண்டு மாங்காய் சுருட்டிக் கொடுத்த பேப்பரில் உள்ள சேதியைப் படிப்பதில் ஆர்வம் காட்டியும் இருப்போம். அப்படியான நாலு துண்டுச் சீட்டில் நாலு விதமான கதைகளைப் படித்த பின்னர் அந்த பேப்பர்களை கசக்கி தூர எறிந்து விட்டு வருமோமில்லையா? அப்படியான மன நிலையை ஏற்படுத்திய படம்தான் ‘குட்டி ஸ்டோரி’. ஆம்.. ஒரு ஷார்ட் ஃபிலிமை கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து இரண்டு மணி நேர சினிமா கொடுத்து வரும் சூழலில் நாலு ஷார்ட் ஸ்டோரியை தொகுத்து ஒரு ஃபிலிமாக கொடுத்து இருக்கிறார்கள். நான்கு குட்டி கதைகளுக்கும் ஒரேயொரு மையப் புள்ளி முறை பிசகிய காதல் என்பதுதான் ஹைலைட். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொல்லி ஐசரிகணேஷ் வணங்கி விட்டு போனவுடன் தொடங்கும் முதல் குறுங் கதை கெளதம் மேனன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் சப்ஜெக்ட். காலேஜில்…
Read More