சிறுவர்களுக்கான சினிமா – குரங்குப்பெடல் !!

சிறுவர்களுக்கான சினிமா – குரங்குப்பெடல் !!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மதுபானக் கடை பரப்புகள் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குரங்கு பெடல். எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இலக்கியம், சிறுகதை, நாவல் போன்றவற்றில் இருந்து படம் எடுப்பது, உலகம் முழுக்க நடைபெறும் வழக்கம் தான். இதன் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் அந்தந்த வட்டாரத்து மக்களின் உண்மையான வாழ்க்கை அந்த கதையில் தானாகவே அமைந்துவிடும். நீங்கள் அதற்கு தனியாக உயிர் கொடுக்க முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு முழுமையான வாழ்க்கை அதிலேயே இருக்கும். தமிழில் நாவல் சிறுகதைகளில் இருந்து படம் எடுக்கும் பழக்கத்தை, வெற்றிமாறன் மட்டுமே வம்படியாக செய்து கொண்டிருக்கிறார். இப்போது அங்கங்கே சில முயற்சிகள் அதன் மூலம் மலர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் திரைப்பட விழாக்களில் பார்க்கும்…
Read More