KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்! திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama…
Read More
ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா !!

ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா !!

  மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பல காலமாக தொடர்ந்து செய்து வருபவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர். அதே போல சமீபமாக பல சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார் சின்னத்திரைப் புகழ் நடிகர் பாலா. இருவரும் இணைந்து தற்போது பள்ளி மாணவர்களுக்காக, உதவிப்பணிகளை செய்துள்ளது பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. KPY பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவிந்து வருகின்றது. இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளியில், பல காலமாக மாணவர்கள் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தர…
Read More
நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

இயக்கம் - கிஷோர் ராஜசேகர் நடிகர்கள் - சதீஷ், பவித்ரா லட்சுமி கதை - ஐடி இளைஞன் ஒருவனை நாய் கடிக்க அவனது டிஎன்ஏ நாய்க்கும், நாயின் டிஎன்ஏ அவனுக்கும் மாற அவனுக்கு நாயின் குணம் வருகிறது அதனால் வரும் பிரச்சனைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் எப்படி அதிலிருந்து வெளிவருகிறான் என்பதே கதை. ஐடியில் வேலையை விட்டு எப்போது தூக்குவார்கள் என கலக்கத்துடன் வேலை பார்த்து வருகிறார் சதீஷ். எல்லொரிடமும் எரிந்து விழுபவர் ஆபிஸில் பவித் ரா லட்சுமியை காதலிக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது. நாய் கடித்த நொடியில் நாயின் டிஎன்ஏ அவருக்குள் பரவி நாயின் குணாதிசயங்கள் சதிஷுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மாற்று மருந்து தயாரான…
Read More
error: Content is protected !!