10
Nov
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம் மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்களின் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் குளோப் என்ற குறும்படத்தின் மூலம்…