பாரதிராஜாவின் இளமைக்கு காரணம் தெரியுமா? – ரஜினி சுவாரஸ்ய பேச்சு!

பாரதிராஜாவின் இளமைக்கு காரணம் தெரியுமா? – ரஜினி சுவாரஸ்ய பேச்சு!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய பெயரில் ஒரு திரைப்படக் கல்லூரியை துவக்கியிருக்கிறார். பாரதிராஜா சர்வதேச திரைப்படக் கல்லூரி என்ற பெயர் சூட்டப்பட்ட இந்தக் கல்லூரியின் துவக்க விழா  நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கலமஹாசன், கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர். தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர். சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை என அவர் புகழாரம் சூட்டினார். பின்னர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், தேசிய விருது தேர்வு செய்வதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். தேசிய விருது தேர்வுக்குழுவில் 12 பேர் உள்ளனர் என…
Read More
சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

நடிகர் கமல்ஹாசன் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் மரணம் அடந்தார். அவரது மறைவுக்கான இரங்கல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சந்திரஹாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “என் நண்பர் கமல்ஹாசனுக்கு அவரை பெற்றவர் மற்றும் வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன் என்று மூன்று தகப்பனார்கள். சந்திரஹாசனை நான் இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன். அவரிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நண்பர் கமல்ஹாசன் சினிமாவில் அதிகம் சம்பாதிக்காதவர். இப்போது உள்ள நடிகர்களிடம் இருக்கும் பணம் கூட அவரிடம் கிடையாது. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதையும் மீறி கொஞ்சம் அவரிடம் பணம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம், சந்திரஹாசன். இனிமேல் எப்படி கமல்ஹாசன் சம்பாதிக்கப்போகிறார். சம்பாதித்ததை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்றுதான் நான் இப்போது சிந்திக்கிறேன். கமல்ஹாசன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்தது…
Read More