பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என பெயரை மாற்றியுள்ளனர்!

பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என பெயரை மாற்றியுள்ளனர்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக 'கல்கி 2898 AD' என பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா - ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன் யாரும் சொல்லிராத கதை சொல்லலில் இந்த திரைப்படம் தயாராகிறது. மேலும் இத்தகைய ஜானரில் அறிவியல் புனைவு கதை திரைப்படத்திற்கான எல்லையை விரிவாக்கம் செய்து புதிய வரையறையுடன் இப்படம் உருவாகிறது. 'கல்கி 2898 AD' ன் பிரம்மாண்டமான வெளியீடு, சான் டியாகோ காமிக்-கானில் நடைபெற்றது. அங்கு திரைப்படத்தின் காட்சிகள் அதன் தொலைநோக்கு கருத்து மற்றும் மயக்கும் காட்சி அமைப்புகள் மூலம் வருகை தந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. படத்தின் புதிய தலைப்பு மற்றும் படத்தின் சாராம்சத்தை துல்லியமாக உள்ளடக்கிய காணொளி.. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்…
Read More
பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே லுக் அதிகாரப்பூர்வ வெளியானது!

பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே லுக் அதிகாரப்பூர்வ வெளியானது!

  வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் பொருத்தமான காரணங்களுக்காக பெரும் சலசலப்பை உருவாக்கி, இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட இந்திய படமாக இந்த திரைப்படம் மாற்றம் பெற்றிருக்கிறது. சான் டியாகோ காமிக்-கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது 'ப்ராஜெக்ட் கே'. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பன்மொழி திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற வாக்குறுதியால் பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது. ப்ராஜெக்ட் கே படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கில் தீபிகா படுகோனின் தோற்றம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செஃபியா டோன் எனும் காட்சிப் பின்னணியில்…
Read More
கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் சிம்பு! அஜித்தை அப்படியே பின்பற்றுகிறார்!

கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் சிம்பு! அஜித்தை அப்படியே பின்பற்றுகிறார்!

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது, இந்த படம் கமலஹாசனுக்கு 234வது படமாக இருக்கும் என்று அறிவித்தார், இதற்கு முன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் ஹீரோவாக நடிக்கும் மணிரத்னம் படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க இருப்பதா ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.. அதாவது சிம்புவின் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வலம் வந்தது ஆனால் அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படம் என்றும் அந்த படத்தில் தான் சிம்பு வில்லனாக நடிக்க போகிறார் என்று தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது... அந்த வகையில் தனது ஐம்பதாவது படத்தில் வில்லனாக நடிக்கப் போறாராம் சிம்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்படி நடந்தால் அஜித்துக்கு பிறகு 50வது படத்தில் வில்லனாக நடிக்கும் கதானாயகன்…
Read More
ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கின்றார் என்றும், ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்திய படத்தில் நடிப்பதற்காக கமலுக்கு 120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி சினிமாவின் தீவிர ரசிகனாவேன். எந்த ஒரு புதுமையான விஷயங்களை பாராட்டும் ரசிகனான எனக்கு ப்ராஜெக்ட் கே படத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் எடுத்துள்ள கதைக்களத்தை கேட்டுவிட்டு ஒரு ரசிகனாக ரசித்தேன். அதைப்போல சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகின்றேன். மேலும் அமிதாப் பச்சனுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் என்றாலும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கார் கமல். உலகநாயகன் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுது.
Read More
ஒரே சமயத்தில் வெளியாகவுள்ள இரண்டு கமல் படங்கள்! ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்து!

ஒரே சமயத்தில் வெளியாகவுள்ள இரண்டு கமல் படங்கள்! ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்து!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தற்போது இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்தில் தான் வெளியாகும் என அறிவிப்புகள் வருகின்றன. தற்போது இந்தியன் 2 திரைப்படம் சென்னை ஏர்போட்டில் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து விறுவிறுப்பாக மீதமுள்ள காட்சிகளை படமாக்கிவிட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பொங்கலுக்கு இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் ஒரே தினத்தில் கமல் நடித்த இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அதாவது பிரபாஸின் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K படத்தில் உலகநாயகன் கமல் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதில் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றது. மேலும் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்படமும் இந்தியன் 2…
Read More
மாமன்னன் படத்தின் ரிலீஸ்  நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா! வசூல் பாதிக்குமா!

மாமன்னன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா! வசூல் பாதிக்குமா!

இது நாள் வரை சோசியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை மட்டுமே அடிக்கடி நடக்கும். இப்போது அவர்களை ஓரங்கட்டி விட்டு மாரி செல்வராஜ் vs கமல்ஹாசன் ரசிகர்கள் சண்டை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்மகன் படத்தின் கிளைமேக்ஸில் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா போங்க என கமல் கத்தியை பிடுங்கிய நிலையில், கர்ணன் படத்தில் போலீஸ் தலையை வெட்டுங்க என மாரி செல்வராஜ் கத்தியை கையில் கொடுத்துள்ளார் என சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவி வருகின்றது அத்துடன் தேவர்மகன் படத்தையே மறந்து போன ஜெனரேஷனுக்கு மீண்டும் தேவர்மகன் படத்தை பார்க்கத் தூண்டிய மாரி செல்வராஜின் பேச்சுக்கு நன்றி என கமல் ரசிகர்கள் பலரும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். மாரி செல்வராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசியது மாமன்னன் படத்தை ஒரு சாரார் பார்க்கவே முடியாதது போல…
Read More
நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு இவ்வளவு சம்பளமா!!

நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு இவ்வளவு சம்பளமா!!

நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்! மிரள வைக்கும் சம்பளம்.. 20 நாளுக்கு இத்தனை கோடியா Project K படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். அவர் வெறும் 20 நாள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது. கமல்ஹாசனை முழுக்க முழுக்க வில்லனாக பார்க்கலாம் என்பதால் தற்போது ரசிகர்கள் இந்த தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Read More
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’  ஐ திறந்து வைத்தனர்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’ ஐ திறந்து வைத்தனர்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம் ஸ்டூடியோஸ். பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளையும், மிக பழைமையான கார்களையும், இரு சக்கர வாகனங்கள் கொண்ட `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்' உருவாக்கியிருக்கிறார்கள். அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அரங்கைப் பார்வையிட்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் தமிழ் சினிமாவில் தயாரித்து கவனம்பெற்ற படைப்புகள் பற்றிய குறிப்புகளும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், விண்டேஜ் கார்கள், படத்தொகுப்புக் கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த மியூசியம் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ``நான் பிறந்த இடமே ஏ.வி.எம் தான். இன்று எனக்கு ஒரு பொன்னான நாள். இந்த மியூசியம் வெறும் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டது அல்ல. சுமார் 80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாறு…
Read More
கமல் எடுக்கவிருந்த பொன்னியின் செல்வனில் விக்ரம்

கமல் எடுக்கவிருந்த பொன்னியின் செல்வனில் விக்ரம்

அமரர் கல்கியின் நாவலைத் தழுவி மணிரத்னத்தின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட `பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவிருக்கிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் நாவலை கமல் தொலைக்காட்சித் தொடராக எடுக்கத் திட்டமிட்டதாகவும், அதில் நடிப்பதற்காக அவர் தன்னை அழைத்ததாகவும் கூறியுள்ளார். இதுபற்றிப் பேசிய விக்ரம், "நீண்ட நாள்களுக்கு முன், கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, தான் பொன்னியின் செல்வனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் அதைத் தொலைக்காட்சிக்காக எடுக்க விரும்பினார். அப்போது அவர் என்னிடம், 'அதில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எந்த வேடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து நடிக்கலாம்' என்றார். அதில் மூன்று வேடங்களில் ஏதாவது…
Read More