29
Jan
ஹைடெக்-காகிப் போன இந்த 21`ஆம் நூற்றாண்டில் கண்ணில் படும் எழுத்துக்களை எல்லாம் சொல்லாக கூறி விடும் டெக்னாலஜி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் கூட பொழுதுப் போக்கு சாதனமான சினிமாக்களுக்கு கதை பிடிப்பதும் அதை சுவைபட வடிவமைக்கும் திரைக் கதையாக்குவதிலும் பலருக்கு கொஞ்சம் கூட ஆர்வமில்லை. அதனால்தானோ என்னவோ நம் கோலிவுட்டில் பலரும் தங்கள் பட டைட்டில் தொடங்கி கதை வசனம் உள்ளிட்ட எதற்கும் மெனக்கெடாமல் விட்டேத்தியாக முன்னொரு கால ஹிட் தலைப்பு தொடங்கி எதையோ வழங்கி இதுதான் சினிமா என்ற பெயரில் காட்சிப்படுத்தி நமக்கான காலத்தைக் கபளிகரம் செய்வார்கள்.. இந்த உபாதையில் சிக்கித் தவிக்கும் கோடம்பாக்க ரசிகனை திருப்திப்படுத்த வென்றே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக யோசித்து பலரும் ரசிக்கும்படி ‘கபடதாரி’ என்றொரு படத்தை வழங்கி இருக்கிறார்கள். கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் அடித்த ‘கவலுதாரி’என்ற க்ரைம் த்ரில்லர் கதையைத்தான் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது துப்பறியும் போலீசாக வாழ ஆசைப்படும் சிபிராஜ் ட்ராபிக்…