24
May
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22.05.2018 அன்று மாலை ஆறுமணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான புரட்சி தளபதி, அயன் மேன் விஷால் அவர்கள் அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் . சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் தெளிவான நீரோட்டத்தமிழில் வரவேற்புரை வழங்கினார். தலைவர் டி .ஆர் .பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர்.ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி ஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, கவுரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துதல் ஆடை அணிவித்து வரவேற்றனர் .முதல் அடையாள அட்டையை மூத்த பத்திரிகையாளர் நெல்லைபாரதிக்கு வழங்கிய விஷால், உதடுகளில் தேங்கிய புன்னகையும், முகத்தில் தவழ்ந்த பெருமிதமும் மாறாமல், கடைசி உறுப்பினர் வரைக்கும் கனிவோடு வழங்கி, சங்கத்துக்கு பெருமை…