30
Oct
ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு 'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கேநாட்கள் தான் உள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான்ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக்கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார். 20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ மூலம் பதிலளிக்கத் தயாராக உள்ளார். ஜெய் பீம்' திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது, "24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லாதருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு.…