11
Jan
Society of the snow 2023 Netflix நீங்க மூவி லவ்வரா எல்லாத்தையும் தூக்கி ஓரம் வச்சிட்டு இந்தப்படம் பாருங்க… சமீபத்துல மார்டின் ஸ்கார்ஸசி டெம்ப்ளேட் ஒன்னு சுத்துச்சு. இதாண்டா சினிமா இந்தப்படம் பார்த்தப்ப அதான் தோணுச்சு! இதுவொரு சர்வைவல் படம் உண்மையில நடந்த சம்பவங்கள வச்சி எடுத்த படம் படத்தோட கதை இருக்கட்டும் படம் பேசுற விசயம் ஒன்ணு இருக்கு. ஏன் கடவுள் இப்படி பண்றாரு வெவ்வேறு சூழ்நிலைகள்ல எத்தனையோ தடவை இந்த கேள்வி எனக்கு முன்ன வந்துட்டு போயிருக்கு.. இந்த கேள்வி இந்தப்படத்திலயும் வருது… கொரானோ வந்தப்ப நான் ஏன் சென்னை வந்தேன் ? வாழ்க்கையில என்ன பண்ண ஆசைப்பட்டேன் ? இந்தக்கேள்வியெல்லாம் மறைஞ்சு போயிடுச்சு.. ஏன்னா சுத்திலும் தெரிஞ்சவங்களோட சாவு, ஏன் சாகனும் எதுக்காக இந்த சாவு ஏன் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நடுவுல உயிர் பிரச்சனை இருக்கிறது மட்டும்தான் முக்கியம் கடைசியா அதுக்காக போராடறது மட்டும்தான்…