Society of the snow
2023
Netflix
நீங்க மூவி லவ்வரா எல்லாத்தையும் தூக்கி ஓரம் வச்சிட்டு இந்தப்படம் பாருங்க…
சமீபத்துல மார்டின் ஸ்கார்ஸசி டெம்ப்ளேட் ஒன்னு சுத்துச்சு. இதாண்டா சினிமா
இந்தப்படம் பார்த்தப்ப அதான் தோணுச்சு!
இதுவொரு சர்வைவல் படம் உண்மையில நடந்த சம்பவங்கள வச்சி எடுத்த படம்
படத்தோட கதை இருக்கட்டும் படம் பேசுற விசயம் ஒன்ணு இருக்கு.
ஏன் கடவுள் இப்படி பண்றாரு வெவ்வேறு சூழ்நிலைகள்ல எத்தனையோ தடவை இந்த கேள்வி எனக்கு முன்ன வந்துட்டு போயிருக்கு..
இந்த கேள்வி இந்தப்படத்திலயும் வருது…
கொரானோ வந்தப்ப நான் ஏன் சென்னை வந்தேன் ? வாழ்க்கையில என்ன பண்ண ஆசைப்பட்டேன் ? இந்தக்கேள்வியெல்லாம் மறைஞ்சு போயிடுச்சு.. ஏன்னா சுத்திலும் தெரிஞ்சவங்களோட சாவு, ஏன் சாகனும் எதுக்காக இந்த சாவு ஏன் ?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நடுவுல உயிர் பிரச்சனை இருக்கிறது மட்டும்தான் முக்கியம் கடைசியா அதுக்காக போராடறது மட்டும்தான் வாழ்க்கைனு ஆயிடுச்சு…
இந்தப்படத்தில வர்ற அந்த கேள்வியும் படத்தோட முடிவுல வர்ற பதிலும் அந்த நினைவுகள் எல்லாத்தையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்துச்சு..
வீட்ல உட்கார்ந்து ஒரு படம் பார்க்கும்போது எண்டு கிரெடிட் பார்த்த முதல் படம் இதுதான்..
1972 உருகுவே விமானப்படை விமானம் சிலிக்கு ரக்பி அணியை ஏற்றிச் சென்ற போது பனிமலையில் விபத்தில் சிக்கியது. விபத்தில் இருந்து தப்பிய சில பயணிகள், உறைபனியில் உயிர்வாழ்வதற்காக என்னென்ன துன்பத்தையெல்லாம் அனுபவிச்சாங்க. உறைபனி ஒவ்வொருவராக காவு வாங்க மிச்சமிருக்கும் சிலராவது பிழைச்சாஙகளா ? என்பதே கதை.
படத்தோட உருவாக்கம் யப்பா .., !!
அந்த பனிமலைகளுக்குள்ள நம்மள கொண்டு போயிட்டாங்க…
அதுவும் அந்த விமான விபத்து கண்ணுக்கு எட்டுற வரை இருக்கும் பனி, பனிப்புயல்னு அந்த உலகத்த நாம பக்கத்தில இருந்து பாக்குற மாதிரியே இருந்தது.
படத்தோட ஒவ்வொரு காட்சியும் நாம எவ்வளவு நல்ல வாழ்க்கை வந்துட்டு இருக்கோம் அப்படிங்கற உணர்வுகளுக்குள்ள நமக்கு உணர்த்தும்..
சமீபத்துல எந்த ஒரு படத்தையும் இவ்வளவு உணர்ச்சிகரமா பார்க்கவே இல்ல..