விமர்சனரீதியாகவும் வசூலிலும் சாதனை படைக்கவுள்ளது கவினின் ‘ஸ்டார்’

விமர்சனரீதியாகவும் வசூலிலும் சாதனை படைக்கவுள்ளது கவினின் ‘ஸ்டார்’

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர். எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர். 'தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப்…
Read More
எப்படி இருக்கிறது ஸ்டார் ?

எப்படி இருக்கிறது ஸ்டார் ?

  இளம் நட்சத்திரம் கவின் நடிப்பில், இளம் இயக்குனர் நலன் இயக்கத்தில், இந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஸ்டார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் இத்தனை எதிர்பார்ப்பை தந்ததில்லை. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இன்றைய கால இளைஞர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது சமீபத்தில் ஒரு டிரெய்லர் மிக அழகாக கட் செய்யப்பட்டு வந்தது என்றால் அது ஸ்டார் படத்திலிருந்து என்று தாராளமாக சொல்லலாம். முழுப் படத்தின் கதையையும் வாழ்க்கையையும் டிரெய்லரிலேயே படக்குழு தந்து விட்டது. இயக்குனரின் முந்தைய படம், நடிகர் கவினின் முந்தைய படமும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திந் மீது ஆர்வத்தை தூண்டியது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா? ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன்…
Read More
அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் பட நாயகன் கவின்! !

அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் பட நாயகன் கவின்! !

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் 'ராஜா ராணி' பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் இளன் பேசியதாவது, ' எனக்கு' மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்... ஒரு…
Read More
கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

'டாடா' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்குகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்க இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 'நித்தம் ஒரு வானம்' படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு…
Read More