சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் பட இயக்குநர் யார்? அந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் பட இயக்குநர் யார்? அந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. "1 பந்து 4 ரன் 1 விக்கெட்" பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார்.. இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா. இதனால் அவரை கவுரவப் படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
Read More
‘கேக்காமலே கேட்கும்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

‘கேக்காமலே கேட்கும்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’. சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளன்ர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன். கன்னடத்தில் 4 படங்களை இயக்கியிருக்கிறேன். ஐந்தாவது படமாக ‘கேக்காமலே கேட்கும்’ படத்தை தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறேன். சமீபகாலத்தில் நிறைய பேய் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படங்களில் இருந்து…
Read More