தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார்!’ஹிட்லிஸ்ட்’ இசை விழாவில் மிஸ்கின்!

தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார்!’ஹிட்லிஸ்ட்’ இசை விழாவில் மிஸ்கின்!

'ஹிட்லிஸ்ட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ்,'சிறுத்தை'சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார்,ஜீவா, 'ஜெயம்'ரவி,நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ்,தயாரிப்பாளர்கள் 'கலைப்புலி'S.தாணு,T.சிவா,சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் K.S.ரவிக்குமாரின் அழைப்பிற்கிணங்க படத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவரான சூர்யகதிர் அவர்களை இயக்குனர் K.பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு இயக்குனர் கார்த்திகேயன் அவர்களை இயக்குனர் P.வாசு அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்கா அவர்களை நடிகர் 'ஜெயம்'ரவி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் படக்குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு…
Read More