பன்முகக் கலைஞன்  இன்னா .. செல்லம்.,. பிரகாஷ்ராஜூக்கு ஹேப்பி பர்த் டே💐

பன்முகக் கலைஞன் இன்னா .. செல்லம்.,. பிரகாஷ்ராஜூக்கு ஹேப்பி பர்த் டே💐

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரகாஷ்ராஜ் இன்று (மார்ச் 24) தன்னுடைய 59ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கர்நாடகாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கன்னடத்தில் சிறு வேடங்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவருக்கு சரியான தொடக்கமாக அமைந்தது கே.பாலச் சந்தரின் டூயட். அதில் இவர் நடிப்பு முதல் முறையாக தமிழ் மக்களால் கவனிக்கப் பட்டது. இதற்கு பிறகு பிரகாஷ் ராஜை மேலும் பிரபலமாக்கியது .மணி ரத்னத்தின் இருவர். இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் காட்டிய நடிப்பு அவ்வளவு சாதரணமானதல்ல. அதுவும் தனது ஆரம்பக்கால நடிப்பில் இருக்கும் ஒரு நடிகனுக்கு, மிகப்பெரிய பேச்சாளரான ஒரு அரசியல் வாதியின் கதாபாத்திரம் என்பது எத்தனை…
Read More