20
Apr
தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; மாவீரன் பிள்ளை படம் பற்றி ராதாரவி பேச்சு தமிழகத்தில் குழந்தைப்பேறு குறைந்ததற்கு காரணம் மது தான் ; மாவீரன் பிள்ளை படம் பார்த்துவிட்டு எச்.ராஜா குற்றச்சாட்டு மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சித்த மருத்துவம் வேண்டும் ; மாவீரன் பிள்ளை பட நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற…