19
Jan
பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக் கொடுத்தது. புதிய கதை, சொன்ன விதம் என இயக்கு நரின் திறமையால் ஜெயித்த படம் இது. அந்த கோலி சோடா ரிலீஸாகி 6 வருஷம் ஆகுது. அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா ஷேர் செய்திருக்கும் சேதியிதோ பிரியமுடன் , ஆட்டோகிராப், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தில் இயக்குனராக மாறினார். கோலி சோடா அவரது இரண்டாவது முயற்சி ஆகும். கோயம்பேடு சந்தைக்கு ஒரு அதிகாலை பயணத்தின் போது கதைக்கான உத்வேகம் அவருக்கு வந்தது. "ஒரு நாள் காலையில் நான் கோயம்பேடு சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தேன், யத்தேச்சையா கடைகளுக்கு மேலே…