நியாயத்தின் பக்கம் நிற்பாளா கார்கி?- கார்கி விமர்சனம்

கார்கி பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க போராடும் ஆசிரியாய் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் மிகப்பெரிய பிளஸ் படம் ஆரம்பிக்கும் இடமும், முடியும் இடமும் தான். சிறிது நேரம் கூட தாமதிக்காமல் முதல் பிரேமில் இருந்து கதைக்குள் போக ஆரம்பித்துவிட்டார்கள். எடுத்துகொண்ட கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை நிமிர செய்துவிட்டார் படத்தின் எழுத்தாளர். லைவ் சவுண்ட், லைவ் லோகேஷன், நிஜத்தில் வாழும் கதாபாத்திரங்கள் என படத்தை நம்முடன் இணைக்க கடினமாக உழைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் படக்குழு. ஒளிப்பதிவாக இருக்கட்டும், எடிட்டாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும் தனியாய் தெரியாமல் கார்கி உலகத்தோடு இணைந்திருக்கிறது. அதுவே திரைப்படத்தை மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறது. அடுத்தாக இந்த திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதலில் இந்த படத்தில் ஆச்சர்ய…
Read More