13
Mar
இயக்குனர் : வித்யாதர் ககிதா இசை : நரேஷ் குமரன் ஒளிப்பதிவு: விஸ்வநாத் ரெட்டி தயாரிப்பாளர்கள்: கார்த்திக் சபரீஷ் நடிப்பு - விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இயக்குனரின் கனவு படைப்பாக இருந்த படம், கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இப்போது திரைக்கு வந்திருக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் விஷ்வக் சென் இப்படத்திற்கு பிறகு மூன்று படம் நடித்துவிட்டார். ஆனால் இப்போதுதான் அவர் நடித்திருக்கும் முதல் படம் வந்திருக்கிறது. கொஞ்சம் பரிசோதனை முயற்சியாக அடித்தட்டு சினிமா ரசிகனுக்கு அதிகம் புரியாத நான் லீனியர் ஃபார்மேட்டில், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையோடு வெளிவந்திருக்கும் திரைப்படம் காமி. இப்படத்தின் கதை நான் லீனியரில் மூன்று காலகட்டத்தில் மூன்று பேருக்கு நடக்கும் கதையாக விரிகிறது. கதையின் ஆரம்பத்தில் நாயகனுக்கு எந்த ஒரு மனிதரையும் தொட முடியாத பிரச்சனை உடலில் இருக்கிறது. அதை சரி செய்ய ஒரு யோகியின் அறிவுரையின் படி 36 வருடத்திற்கு ஒரு முறை…