03
Dec
ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' & 'கண்ணை நம்பாதே' படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது! நடிகர் அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே' போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாறன். இப்போது, ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பிளாக்மெயில்' படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். இயக்குநர் மு. மாறன் கூறும்போது, “திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப்…