ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

இயக்கம் - விஜய பாஸ்கர் நடிகர்கள் - விஜய பாஸ்கர், டோரா ஶ்ரீ, சுகுமார் சண்முகம் கதை - ஒரு குழுவாக சமூகத்தின் அழுக்குகளோடு அரவாணிகள் வாழ, அவர்களின் வாழ்க்கையில், ரௌடியின் சிறு பையன் செய்யும் பிரச்சனையால், அவர்கள் வாழ்வு எப்படி மாறுகிறது என்பதே கதை தமிழ் சினிமா கேலியும் கிண்டலும் மட்டுமே செய்த மூன்றாம் பாலினத்தவரான அரவாணிகள் வாழ்வையும், அவர்களின் வலிகளையும், ரத்தமும் சதையுமுமாக சொல்ல முயன்றிருக்கிறது இந்த ஃபில்டர் கோல்ட். அதற்காகவே இப்படத்தை பாராட்டலாம். நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், தனி மனித உரிமைகளுக்கே இன்னும் சரியான தீர்வுகளே கிடைக்கவில்லை. இதில் அரவாணிகள் பிரச்சனைகள் எல்லாம் சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிற உலகில், அவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி பதிவு செய்துள்ளது இந்த சினிமா. அரவாணிகள் பற்றி சமூக வலைதளங்களில், அரசியல் மேடைகளில் பொது வெளிகளில் மாரியாதையும் மதிப்பும் பாராட்டுகள் கிடைத்தாலும், நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.…
Read More