23
Jul
Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது.., “ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“ ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது.., “இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த படம் இப்படி உருவாவதற்கு காரணம். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு…