இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்…
Read More
கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

  தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்த விசயத்தில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022' எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதன் போது, இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி…
Read More