இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு தொடரும் எதிர்ப்பால் அதிகரிக்குது ஆடியன்ஸ்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு தொடரும் எதிர்ப்பால் அதிகரிக்குது ஆடியன்ஸ்!

சிலரால் ‘பிட்டு படம்’ என்ற ரேஞ்சில் விமரிசிக்கப்பட்ட 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட இயக்குநர், தயாரிப்பாளர் மீது காவல் ஆணையரிடம் மாணவர் அமைப்பினர் புகார் அளித்தனர். உங்கள் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தைப் பார்ப்பீர்களா? என மாணவர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். அத்துடன் இயக்குநர் பாரதிராஜா இப்படம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 'ஹரஹர மஹா தேவகி' படத்தை இயக்கிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கிய படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்தும், இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதிகப்பட்ச ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள்…
Read More