தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரத்திலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று படத்தின் புரோமோ டீசரை வெளியிடுவதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாகவுள்ளது.…
Read More
’சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி !

’சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி !

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன். இதனால், ’சங்கமித்ரா’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக 'எம்.எஸ்.தோனி' படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. முன்னதாக இந்த சங்கமித்ரா படம் பற்றிய அறிவிப்பை கேன்ஸ் திரைப்படவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு வெளியிட்டனர். படத்தின் முக்கியமான சங்கமித்ரா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவரும் படத்துக்காக வாள் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார். பின் ஸ்ருதி, சங்கமித்ரா படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து படக்குழுவும் ஸ்ருதியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். இதனால் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. ஹன்ஸிகா உள்ளிட்ட சில…
Read More