25
May
இயக்கம்: முருகன் நடிப்பு: வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு ப்ரியா இசை: விவேக் சரோ தயாரிப்பு: லதா முருகன் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் முக்கிய பாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ள படம் பகலறியான். சின்ன பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஒரு இரவுக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை கோர்த்து ஒரு திரில்லரை தந்திருக்கிறார்கள். காதலியை ஒர் இரவில் கடத்திக்கொண்டு திருமணம் செய்ய போகிறார் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்ற குற்றவாளி வெற்றி. இன்னொரு புறம் தன் தங்கையை காணவில்லை என சென்னையில் பிரபல ரௌடி தேட ஆரம்பிக்கிறான். வெற்றியையும், ரௌடியையும் கொலை செய்யும் நோக்கத்தில் சில குழுக்கள் அலைகின்றனர், இந்த கதைகளின் தொடர்பு என்ன ? இறுதியில் நடக்கிறது என்பது தான் படம். நாயகனாக நடித்திருக்கும் வெற்றிக்கு வழக்கமான கதாப்பாத்திரம் அதை தன் பாணியில் சிறப்பாக செய்துள்ளார். வெற்றி…