எப்படி இருக்கிறது  டியர் திரைப்படம் ?

எப்படி இருக்கிறது டியர் திரைப்படம் ?

ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'டியர்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியே மிக வித்தியாசமான கூட்டணி, இவர்கள் இருவர் ஜோடியில், குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் டியர். சில மாதங்கள் முன்பாக குறட்டைப் பிரச்சனையை மையமாக வைத்து குட் நைட் என்ற படம் வந்தது. மணிகண்டன் நடிப்பில் வந்திருந்த அந்த திரைப்படம், குறட்டை பிரச்சனையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பங்களையும் விரிவாக அலசி இருந்தது. கிட்டத்தட்ட டியர் படத்தின் கதையும் அதேதான். ஆனால் இந்த படத்தில் குறட்டை பிரச்சனை இருப்பது கதாநாயகிக்கு!! நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறு பிரச்சனை எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதை திரைக்கதை ஆக்கும் பாடங்கள் பெரும்பாலும் ஜெயித்து விடும். அந்த வகையில்…
Read More
வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள்! “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்!

வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள்! “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்!

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை நந்தினி பேசியதாவது.... இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் இளவரசு பேசியதாவது.,, பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன…
Read More
ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டியர்’ பட அப்டேட்!

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டியர்’ பட அப்டேட்!

  Nutmeg Productions தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ரோமியோ பிக்சர்ஸ். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.…
Read More