01
Apr
இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில் ரஜினிகாந்த் அற்புதமாகவே பரவச் செய்தார். ஸ்டைல் தனம் காட்டும் முன்பே அவரது கண்ணும் முகபாவங்களும் தாண்டவமாடிய படங்கள் பிரமிக்கத்தக்க வையாகவேகவே இருக்கும் அறிமுகப் படமான அபூர்வ ராகங்களில் புதிதாக அவருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் இரண்டாவது படமான கதா சங்கமம் (கன்னடம்) குங்கும ரக்சே ( கன்னடம்) சிலிக்கம்மா செப்பிண்டி (தெலுங்கு) போன்ற படங்கள் ரஜினிக்குள் இருந்த மகா கலைஞனை திரையில் முன்னிறுத்தின. எதற்காக சொல்கிறோம் என்றால் நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண குமாரும் நிழல் நிஜமாகிறது கமலும் ரஜினி பிரதிபலித்த பாத்திரங்களை ஒப்பிடுகையில் கொஞ்சம் பின்தங்கியே போனார்கள். புரியும்படி சொன்னால் கல்யாணகுமார் பாத்திரத்தைவிட ரஜினி சிறப்பாக செய்தார். தெலுங்கில் ரஜினி செய்த வேகத்திற்கு தமிழில் கமலால்…