16
Oct
ஒரு சில திரைப்படங்களின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்து விட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர்தான் 'எறிடா'. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த 'எறிடா' படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் - வி.கே.பிரகாஷ், தயாரிப்பு - அஜி மிடாயில், அரோமா பாபு, வசனம் - ஒய்.வி.ராஜேஷ், ஒளிப்பதிவு - எஸ்.லோகநாதன், படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ்,…