22
Jul
T.S.பாலையா..one and only...! "அசோகரு நம்ம மகருங்களா?"...என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும், பிலிப்பைன்ஸ் போயிருக்கான் என்று சொன்னால், "என்னது புலிகிட்ட பேசிட்டு இருக்கானா"?ன்னு தனக்கு தோன்றியதை கேட்கிற ஊட்டிவரை உறவு, வேதாசலம் ஆகட்டும்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான தொழிலதிபர் வேடங்களில் பாலையா நடித்தார் என்பதைவிட, அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தார்.காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் சீன் எவ்வளவு பிரபலமோ, அதற்கு நிகரானது ஊட்டிவரைஉறவு படத்தில் காதலியை பற்றி சொல்ல ஆரம்பித்த மகன் சிவாஜியை ஒட்டியபடியே பாலையா செய்யும் அட்டகாசம். அந்த காட்சியையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா உண்மையிலேயே பேரதிஷ்டம் செய்த ஒன்றுதான் என்று தோன்றும்.. பாலையாவின் நடிப்பை வில்லன், குணச்சித்திரம் என இருகூறுகளாக போட்டால் அதில் எது அட்டகாசம் என்பது கண்டுபிடிப்பது கஷ்டம்.,’ எம்கேடி பாகவதர்-பியு சின்னப்பா சகாப்தத்தில் துவம்ம் செய்த பாலையாவை பலருக்கும் தெரியாது.1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என…