வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

தனுஷ் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது ? பெரும் பொருட்செலவிலா பயங்கரமான ஆக்சன் காட்சிகளுடன், டிரைலர் வந்தபோதே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்து இருக்கிறதா? சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் ராஜாக்கள் அடித்தட்டு மக்களை கோயிலுக்குள் கூட வரவிடாமல் தடுத்து வைத்து அடிமைப்படுத்த, மரியாதை கிடைக்கிறது என, பிரிட்டிஷாரிடம் சிப்பாயாக போகிறான் ஈசன். அவனுக்கு அங்கு கிடைக்கும் பெயர் மில்லர். ஒரு கட்டத்தில், அவன் சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷார் கட்டளையிட, அங்கிருந்து வெளியேறுகிறான். பின் ஆங்கிலேயருக்கு எதிராக போராடுகிறான். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமில்லாமல், தன் மக்களை கொடுமைப்படுத்தும் ராஜாவுக்கு எதிராகவும், தன் கிராமத்திற்காகவும் போராட ஆரம்பிக்கிறான். எந்த காலகட்டத்திலும் அடித்தட்டு மக்களுக்கான மரியாதை, அவர்களுக்கான மதிப்பு, யார் ஆட்சிக்கு வந்தாலும் தரப்படுவது இல்லை. அவர்கள் மீது சுரண்டல் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.…
Read More