பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில் பேசவைத்தது சட்டக்காரி என்ற படம்.. நடிகை லட்சுமிக்கு செமபிரேக்.. முதல் கணவர் மோகன் சர்மா உடன் நடித்த படம். இயக்குனர் கே எஸ் சேதுமாதவன். 1962- ல் கமலை மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஜாம்பவான். தமிழில் எம்ஜிஆரை வைத்து நாளை நமதே கமலை வைத்து நம்மவர் போன்ற படங்களை பின்னாளில் இயக்கியவர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவானின் படத்தில் பணியாற்றிய பாலுமகேந்திராவுக்கு அதற்குப் பிறகு ஏறுமுகம்தான்..சட்டக்காரி படம்பின்னர் இந்தியில் ஜூலியாக எடுக்கப்பட்டு அதிலும் லட்சுமி கிளாமராக கலக்கியதில் அகில இந்திய அளவில் தாறுமாறாக ஓடியது தனிக்கதை.. போட்டோகிராபியுடன் ஏழு முகத்தைக் கண்ட பாலுமகேந்திராவுக்கு டைரக்சன் செய்யும் ஆசையும் வந்துவிட்டது. 1977-ல் டைரக்டராய் கச்சிதமாய் கன்னடத்தில் செதுக்கியபடம் கோகிலா. கமலின்…
Read More