பைரி வாழ்வியலைச் சொல்லும் படம் !!

பைரி வாழ்வியலைச் சொல்லும் படம் !!

இயக்கம் : ஜான் கிளாடி நடிகர்கள்: சையத் மஜீத், மேகனா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார் இசை: அருண் ராஜ் தயாரிப்பு: வி.துரை ராஜ் பைரி என்றால் கழுகு என்று பொருள். நாகர்கோவில் நகரில் புறா பந்தயத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை வைத்து வெளிவந்திருக்கும் படம். முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பதிவாக மாறியிருக்கிறது. நாயகன் சையத் மஜித், படித்துவிட்டு வேலைக்கு போகாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயமும் நடத்தி வருகிறார். ஊரில் பெரிய ரவுடியாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்துகிறார். புறா பந்தயத்தில் வினு லாரன்ஸ் செய்யும் மோசடியை சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனால் நாயகன் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார், என்பது தான் படம்…
Read More