வசூலில் பட்டையை கிளப்பும் மலையாளப் படங்கள் !!

வசூலில் பட்டையை கிளப்பும் மலையாளப் படங்கள் !!

  மொழி எதுவாக இருந்தாலும் சிறந்த படங்கள் வந்தால் நம்ம தமிழ் ரசிகர்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதிலும் மலையாள திரைப்படங்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும்.. தலையிலே தூக்கி வைத்து கொண்டாடி விடுவார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்டா இணைஞ்சுருக்குது மோலிவுட் படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது தான். குறிப்பாக, குணா குகை பகுதியில் நடந்த சம்பவமிது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’படத்தின் ட்ரெய்லரிலேயே கண்மணி அன்போடு காதலன் பாடலின் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வரிகளை படத்தில் வரும் இளைஞர்கள் பாடுவதுபோல் வரும். அதோடு, கமலின் குரலிலும் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும். அப்போது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எக்கச்செக்கமாக எகிறியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்கள். டைரக்டர் சிதம்பரம்…
Read More
மம்முட்டியின் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

மம்முட்டியின் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது. 'பிரமயுகம்' மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான 'கண்ணூர் ஸ்காவ்ட்' படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க…
Read More