12
Jan
மூக்குத்தி அம்மன் மற்றும் Hotstar Specials-ன் முதல் தமிழ் தொடரான ட்ரிப்ள்ஸ்-ன் அதிரடி வெற்றியை தொடர்ந்து, Disney + Hotstar VIP “பூமி” படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளி யிட்டது. மேலும் இப்படம் தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக, அதிஅற்புதமான தரத்தில் வழங்குகிறது. ஜெயம் ரவி மற்றும் நித்தி அகர்வால் நடித்துள்ள “பூமி” திரைப்படம், விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன், ஒரு தனி மனிதன் தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தை அழகாக சொல்கிறது. படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியது….. “பூமி” திரைப்படம் எனது மனத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு திரைப்படம். ஒரு சில கதைகள் தான் நேர்மறையான கருத்துக்கள் மூலம் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இப்படம். இயக்குனர் லக்ஷ்மண் பொழுதுபோக்கு அம்சத் தையும் இப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை…