பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா? இப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. கவலையால் தோன்றும் நோய்கள் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும் பலத்தை இழக்கச் செய்யும் பலவகை ஏக்கங்களை உண்டாக்கும் மூளைக்கோளாறு இரத்த அழுத்தம் இருதய நோய் மொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.  இந்த திடீர் தோன்றல்…
Read More
ரசனை, கொண்டாட்டம் எல்லாம் மீண்டும் கிடைக்கிறது – பிஸ்கோத் சந்தானம் ஹேப்பி!

ரசனை, கொண்டாட்டம் எல்லாம் மீண்டும் கிடைக்கிறது – பிஸ்கோத் சந்தானம் ஹேப்பி!

தமிழக அரசின் அனுமதிக்குப் பின் தீபாவளியன்று ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கி, சந்தானம் நடிப்பில் வெளியான படம் 'பிஸ்கோத்'. இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டது பற்றி இயக்குநர் ஆர்.கண்ணனும், நடிகர் சந்தானமும் பேசினார்கள்: இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “ கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100% நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால் எந்தளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எங்களுக்கு தான் தெரியும். ஊரடங்கு தளர்வை அரசாங்கம் அறிவித்ததும் இப்படத்தை  உடண்டியாக ஓடிடி-யில்  வெளியிடலாமா? அல்லது திரையரங்கில் வெளியிடலாமா? என்று ஆலோசித்தோம்.  திரையரங்கில் வெளியிட்டால் ரசிகர்கள் வருவார்களா.. மாட்டார்களா என்ற சந்தேகம் இருந்தது. பின் தைரியத்துடன் வெளியிட முடிவு செய்தோம். சந்தானம் இல்லையென்றால் இந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை. இன்னும் 2 மணி…
Read More
தீபாவளி அன்று ரிலீஸாகும் சந்தானம் படத்துக்கு ‘பிஸ்கோத்து’ டைட்டில் ஏன்? – கண்ணன் விளக்கம்!

தீபாவளி அன்று ரிலீஸாகும் சந்தானம் படத்துக்கு ‘பிஸ்கோத்து’ டைட்டில் ஏன்? – கண்ணன் விளக்கம்!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளி யாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜ பார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம் பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். இந்த பிஸ்கோத்து படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும் போது, ” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப் படுத்தி இருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார்.…
Read More