மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளூக்காக ராகவா லாரன்ஸ் செய்த மனிதம்!

மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளூக்காக ராகவா லாரன்ஸ் செய்த மனிதம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர் …. நீங்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில்…
Read More
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

எழுத்தாளர்களில் பலரும், திரைப்பட இயக்குநர்களில் பலரும் தங்கள் சிறுவயதிலும், இளமைப் பருவத்திலும் விருப்பக் கனவாய் கொண்டிருந்தவைகளையே பிற்காலத்தில் படைப்பாக்குகிறார்கள்.‘ஸ்பீல் பெர்க் ‘கும் அப்படித்தான். ஆனால், அவருடைய கனவு கள் வித்தியாசமானவை, மிகப் பெரியவை. ஸ்பீல் பெர்க் சக்திமிக்க இயக்குநராகி பெருமளவில் செல்வத்தைக் குவிப்பதற்குக் காரணமாயிருந்தது அவருடைய நுண்ணறிவேயாகும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1947-ல் இதே டிசம்பர் 18-ஆம் நாள் பிறந்தார். பிறந்த இடம் ஸின் ஸினாட்டி (அமெரிக்க ஓஹியோ மாநிலம்). சின்ன வயதிலேயே விசித்திரமான பொருட்களின் மீதும், அதிசயமான விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர் அவர். வானத்தில் இருந்து எரிகற்கள் மழையாய் விழு வதைப் பார்க்க அதிகாலை 3 மணிக்குத் தனது தந்தை யோடு மலைப்பக்கம் சென்றிருக்கிறார். அவருடைய தந்தை ஓர் எலக்ட்ரிகல் என்ஜினீயர். அமெரிக்கா அப்போது கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்கியிருந்தது. அவர் தனது தொழிலை முன்னிட்டு குடும்பத்தோடு ஊர் ஊராய் மாறியபடி இருந்தார். தந்தையின் நேர உணர்வு, எதையும் நேர்த்தியாகச் செய்யும் தன்மை…
Read More
வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி!

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி!

அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு.. பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம் குரல் மேல் அப்படியொரு காதல். படத்தில் பாடும் கே.ஆர்விஜயாவோடு வாணியும் நம்முள் ஊடுறுவினார்.. கொஞ்சநஞ்சமல்ல வெறித்தனமாக. பாடலில் வரும் . காவல் தலைவன் ஞானத்தமிழன் எந்தன் துணைவன் இன்பக்குமரன்.. என்ற வரிகளை வாணி பாடும்போது, அதிலும் இரண்டாவது முறை இந்த வரிகளை இழுக்கும்போது என்ன கெமிஸ்ட்ரியோ?. 1974லிருந்து பாடல் உருகவைத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை நடை உடை பாவனை அனைத்திலும கே.ஆர் விஜயா மாதிரியே இந்த பள்ளிக்கூட டீச்சரின் தாக்கமா? இல்லை தோழிக்கும் இந்த சேம் வாய்ஸ் இருந்ததால் குடைந்து கொண்டே வந்த தாக்கமா? என்ன இம்சையோ போடா வெங்கடேசா... அடுத்து எங்கம்மா சபதம். அன்பு மேகமே இங்கு ஓடி வா பாடல்.. மேலே சொன்ன இரண்டு பாடல்களையும் விவித பாரதியில் கேட்கும்போதெல்லாம். மனசு காற்றில் பறக்கும். சரி வாணி…
Read More
பிறந்த நாளில் அப்துல் கலாம் பாணியில் களமிறங்கிய சௌந்தரராஜா!

பிறந்த நாளில் அப்துல் கலாம் பாணியில் களமிறங்கிய சௌந்தரராஜா!

  சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்ட மணியுடன் ஹீரோவாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலமாக அறிமுகமானார். தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, என சௌந்தரராஜாவின் திரைப்பயணம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்டு 11. சௌந்தரராஜாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 25 வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டு, அதை வளர்க்க ஏற்பாடு செய்து தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், சௌந்தரராஜா. தன் சொந்த செலவில், முறையாக பெரிய குழிகள் தோண்டி, அடிப்படை உரமிட்டு, ஆடு, மாடுகள் கடிக்காமல் இருக்க, ரூபாய் 1200க்கு மேல் விலையுள்ள ஆளுயர பாதுகாப்பு கூண்டுகள் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஏற்பாடு செய்து, அவற்றை முறையாக…
Read More
கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

'' 'நாசா' வுக்கு எப்படி ஒரே ஒரு 'வாயேஜர்' விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார் '' எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் '12.12.1950' படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் நேற்று தங்களது 'வாயேஜர்' விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளி யையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா 'நாசா' விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால…
Read More