25
Mar
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில் இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில் இசையமப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்துள்ள ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெற்றிமாறன், லிங்குசாமி பேரரசு போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் லிங்குசாமி, “இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். ’பொல்லாதான்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்- இவானா ஜோடி நன்றாக உள்ளது. இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம். பாரதிராஜா சாரும்…