23
Feb
இயக்குநர் சங்க தேர்தல் K.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா ! 2020 - 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு தேர்தலில் பங்கு கொள்கிறது. இவர்களின் அறிமுக விழா இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் அவர்கள் பத்திரிக்கை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார். இயக்குநர் K.பாக்யராஜ் பேசியதாவது…. எங்கள் இமயம் அணி இன்று அறிமுகமாவது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி. உதவி இயக்குநர்களுக்கு, இயக்குநர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் கஷ்டங்கள் உள்ளது என குழுவாக விவாதித்தே இந்த வாக்குறுதி அறிக்கையை உருவாக்கினோம். பெயருக்காக இல்லாமல் வெற்றி பெற்றவுடன் இதில் அறிவித்துள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்ற, முழுமையான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.…