இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.
Read More
`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னனி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்'…
Read More
டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில்  ‘ஷார்ட் கட்’ படத்திற்கு  இரண்டு விருதுகள்..!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘ஷார்ட் கட்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..!

சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள 'ஷார்ட் கட்' பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதை பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் உபாசனா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் 'அறம்' ராம் ஆகியோர் நடித்துள்ளனர். விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீதர், “எனது முதல் படத்திலேயே இந்த கவுரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார். படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில், “பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும்,…
Read More
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரஸ்தம் படத்தில் நடித்த இந்தி நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்னாமினுங்கு-தி ஃபயர்ஃப்ளை’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரபி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படத்துக்கான விருது, கசாவ் என்ற மராத்தி படத்துக்குக் கிடைத்துள்ளது. ‘வென்டிலேட்டர்’ என்ற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளார். சமூக பிரச்னைகளை சிறப்பாகச் சொன்னப் படத்துக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த இந்திப் படத்திற்கான விருது சோனம் கபூர் நடித்த ‘நீரஜா’வுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்தப் படமாக ‘தானக்’ என்ற தெலுங்குப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்த காஷ்மீர் நடிகை சாய்ரா வாஸிமிற்கு கிடைத்துள்ளது. ஜோக்கர் தமிழில்…
Read More