01
Mar
புது முகங்களின் உருவாக்கத்தில் வந்திருக்கும் திரில்லர் திரைப்படம் ரீல் பெட்டி தயாரிப்பில் தயாரித்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, சைதன்யா பிரதாப், அனந்த நாக், கவுரவத் தோற்றம் அருண் பாண்டியன் நடிப்பில் சுனில் தேவ் எழுதி இயக்கி இருக்கும் படம். தமிழில் தெளிவான திரைக்கதை உடன் திரில்லர் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்காகவே வந்திருக்கும் படம் அதோ முகம். மிக சிம்பிளான ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு மிக அட்டகாசமான ஒரு திரைக்கதை வடிவத்தை தந்து, இறுதிவரை நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கி, சுவாரசியமாக சீட்டு நுனியில் உட்கார வைத்து, ஒரு அழகான படைப்பை தந்திருக்கிறார்கள் இந்த புதுமுகங்கள். கதை மிகச் சின்ன கதை காதலால் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு தம்பதி. தன் மனைவியை சர்ப்ரைஸ் செய்வதற்காக போராடுகிறான் கணவன். அவளுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டி, அவளது ஃபோனில் அவளுக்கே தெரியாமல் கேமரா ஆப் இன்ஸ்டால் செய்து அவளை கண்காணிக்க…