23
Nov
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அடுத்தடுத்து சரியான படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறினார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அதர்வா முரளி, அம்மு அபிராமி சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா, ரகுமான், சரத்குமார் என மூவருப் கதைகளை ஆந்தாலஜி போல தனித்தனியாக சொல்லி அதை இறுதியில் இணைத்திருக்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஶ்ரீஜித் சரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. அதை இந்தப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதா என்றால் பாதிகிணறு தாண்டிய கதைதான் கார்த்திக் நரேனிடன் சினிமா தொழில் நுட்பம் அறிந்த நல்ல மேக்கிங் இருக்கிறது.…