‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது- அருண் விஜய்!!

‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது- அருண் விஜய்!!

  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   நடிகர் அருண்விஜய் பேசியதாவது, "பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் 'மிஷன் சாப்டர்1' என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம். அதை செய்து கொடுத்த லைகாவுக்கு நன்றி. நான் இதுவரை நடித்தப் படங்களிலேயே 'மிஷன் சாப்டர்1' தான் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரிப்ட் கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். ஏமி…
Read More
சர்ச்சைகளின் நாயகன் பாலாவின் “வணங்கான்” போஸ்டரே மிரட்டல் !!

சர்ச்சைகளின் நாயகன் பாலாவின் “வணங்கான்” போஸ்டரே மிரட்டல் !!

  இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணாங்கான் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே புயலாக தாக்கியவர் இயக்குநர் பாலா. எப்போதும் சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும் அவரது படங்கள் மனிதம் பேசும். அனைவரையும் பிரமிக்க வைக்கும். சேது முதல் நாச்சியார் வரை அவரது ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமா சரித்திரத்தில் நீங்காத இடம் பிடிப்பவை. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை V House Production சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மாநாடு படதிற்குப் பிறகு இப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையுமென தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரே தற்கால சர்ச்சைகளை அழுத்தமாக பேசும் வகையில் அட்டகாசமாக அமைந்துள்ளது. போஸ்டரில்…
Read More
விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’

விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லயே' படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள் இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில்…
Read More
சினம் திரை விமர்சனம் !!!

சினம் திரை விமர்சனம் !!!

  இயக்கம் - GNR குமரவேலன் நடிகர்கள் - அருண் விஜய், காளி வெங்கட் கதை - ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி அவரின் மனைவி திடீரென கொலையாக, தன் மனைவி மீதான களங்கத்தை போக்கி உண்மையான குற்றவாளியை கண்டறிய போராடுகிறார். இந்தப்படத்தின் ஒரே நல்ல விசயம் அருண் விஜய் காளி வெங்கட் இருவரின் நடிப்பு. அருண் விஜய் மிடுக்காக போலீஸ் பாத்திரத்திற்குள் உட்கார்ந்து கொள்கிறார். அவருக்கு எந்த பாத்திரமும் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மனைவி கொலைக்கு காரணமானவர்களை தேடுவது, மனைவையியை இழந்து சாடுவது என அனைத்து இடங்களிலும் அசத்துகிறார். காளி வெங்கட் தன் பாத்திரத்தோடு ஒன்றி அசத்தியிருக்கிறார். ஆனால் இந்தப்படம் இவர்கள் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லாமல் இருக்கிறது. நாயகி நன்றாக நடித்தும் விழலுக்கு இறைத்த நீர். கதை திரைக்கதை காட்சிகள் சொல்லப்படும் அறம் என் அனைத்தும் மிக மோசமான அனுபவத்தை தருகிறது. ஒரு நல்ல கதை திரைக்கதையாலும் மிக…
Read More
அருண் விஜயின் சினம் பட டிரைலர் வெளியீட்டு விழா!

அருண் விஜயின் சினம் பட டிரைலர் வெளியீட்டு விழா!

Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் இயக்குனர் ஹரி கூறியதாவது.., “படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் அறிவழகன் கூறியதாவது.., “அருண் விஜய் உடைய அர்பணிப்பு அபாரமானது, அவர் எல்லாவற்றில் முழு கவனத்துடன் செயல்படகூடிய நபர். இந்த படத்திலும் முழு உழைப்பை தந்துள்ளார். விஜயகுமார் சார் உடன் சேர்ந்து…
Read More
அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி சாதனை

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி சாதனை

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றித்திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது. ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்க்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. சென்னை (26-08-2022):* கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம், திரையரங்கில் வெளியான போதே விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது. இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாசம், ஆக்சன், செண்டிமெண்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்…
Read More
எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட அதிரடி ஸ்டார் ஆதித்யா உடைய புதிய படமான கருடா தமிழ்ராக்கர்ஸ் எனும் இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த தொடரில் அருண்விஜய் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த நிகழ்ச்சியை மனோஜ் குமார் கலைவாணன் எழுதி ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. அதிக பொருட்செலவில் உருவான ஒரு படத்தை திருட்டுதனமாக வெளியிட போவதாக அறிவிக்கும் ஒரு கும்பலை, காவல்துறை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே கதை. தமிழ் ராக்கர்ஸ் எனும் சட்டவிரோதமான வலைதளம் தமிழ் சினிமாவில் செய்துவந்த குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வலைதொடர் தான் இந்த தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கபட்ட சினிமாவின் பார்க்காத முகத்தை…
Read More
யானை ஹரியின் வழக்கமான மசாலா ஆனால் …!

யானை ஹரியின் வழக்கமான மசாலா ஆனால் …!

  யானை இயக்கம் - ஹரி நடிகர்கள் - அருண் விஜய், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர் இராமேஸ்வரம் பெரிய குடும்பம் நாயகன் இளைய தாரத்து மகன், மற்றொரு ஜாதி தலைவர்ருக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை இந்த நிலையில் குடும்பத்திற்குள் பிரச்சனை நிகழ அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதே படம். தமிழ் சினிமாவில் ஹரி கமர்ஷியல் படங்கள் செய்வதிலும், நாயகர்களை ஆக்சன் ஹீரோவாக குடும்பங்களுக்குள் கொண்டு சேர்ப்பதிலும் கை தேர்ந்தவர். அவரது அனைத்து படங்களுமே கிட்டதட்ட பிளாக்பஸ்டர். ஆர்ட் சினிமாவுக்குள் அவர் படங்கள் அடங்காது அடங்கவும் தேவையில்ல்லை. அவரது பாணி கமர்ஷியல். அதில் நம் தினந்தோறும் பார்க்கும் இடங்களின் மனிதர்களை வைத்து திரைக்கதையில் விளையாட்டு காட்டினால் போதும். பெரிய செட்டப், உறவுகள், பரபரக்கும் வண்டிகள், நகரம் முழுக்க விரியும் கேமரா, எல்லாம் ஓடிக்கொண்டே இருக்கும் திரைக்கதை, நாயகியுடன் ஊடல் இதெல்லாம் ஹரியின் வழக்கம் எல்லாமும் இதில்…
Read More
யானை டிரைலர் வெளியீட்டு விழா

யானை டிரைலர் வெளியீட்டு விழா

“யானை” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா ! தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் முடிக்கப்பட்டு, வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குனர் ஹரி பேசியதாவது.... நானும், அருண்விஜய் சாரும் இணைய வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் சக்தி சார். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த…
Read More
ஓ மை டாக் திரை விமர்சனம்

ஓ மை டாக் திரை விமர்சனம்

இயக்கம் - சரவ் சண்முகம் நடிகர்கள் - அருண் விஜய், ஆர்ணவ் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சம் உரிமையை தர வேண்டும் என்கிற கருத்தை ஒரு நாயின் மூலம் சொல்ல முயன்றிருக்கும் குழந்தைகள் படம் கதை - ஒரு சிறுவன் தெருவில் கிடக்கும் கண் தெரியாத நாயை எடுத்து வளர்க்கிறான். அதனால் அவன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. இன்னொரு பக்கம் வில்லன நாயை அடைய முயற்சிக்கிறான். இந்த நிலையில் நாயை கொண்டு போட்டியில் கலந்துகொள்கிறான் சிறுவன் அவன் ஜெயித்தானா என்பதே படம். ஓடிடிக்கென்றே நேரடியாக எடுக்கப்பட்டுள்ள 2டி நிறுவனத்தின் தயாரிப்பு. மூன்று தலைமுறையை சேர்ந்த அருண் விஜய், ஆர்ணவ் விஜய், விஜயகுமார், இணைந்திருக்கும் படம், குழந்தைகள் படம் என பல ஆச்சர்யங்கள் இருந்தாலும் படமாக மிகுந்த சோர்வை தருகிறது. ஓடிடி உலகில் வாராவாரம் கதைகள் தர வேண்டிய அழுத்தம் இருக்கவே தமிழ் சினிமா குறுகிய கால குறும்பட…
Read More