‘ஓ மை டாக்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.

‘ஓ மை டாக்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.

முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது. நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு…
Read More
டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

    படத்தின் நாயகன் அருண் விஜய் பேசுகையில், '' என்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்க்கு இது போன்றதொரு அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்த சூர்யா-ஜோதிகா ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் 2d பட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ணவ் முதல் படத்திலேயே என்னுடன் நடிப்பதை விட அவருடைய தாத்தா உடன் இணைந்து நடிப்பதை பாக்கியமாக கருதியதால், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என எண்ணி, அவரை நட்சத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இதனை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதை. நிறைய உணர்வுகள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய அப்பாவின் கதாபாத்திரம் ஆர்ணவ் விஜய் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் யதார்த்தமாக இயக்குநர் எழுதியிருந்தார். கதையைக் கேட்டபோது ஆர்ணவ் விஜய்யின் 70 முதல் 80 வீத சேட்டைகள் கதையில் இடம் பெற்றிருக்கிறது.…
Read More
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் படமே ’ஓ மை டாக்!’

அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் படமே ’ஓ மை டாக்!’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல்…
Read More
2 மில்லியனை கடந்த யானை!

2 மில்லியனை கடந்த யானை!

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை ! டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் பிரமாண்ட படைப்பு “யானை”. தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” படத்தின் குறுகிய காலத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “யானை” படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
Read More
3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியான அருண் விஜய்யின் ‘பார்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியான அருண் விஜய்யின் ‘பார்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'பார்டர்'. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார். 'AV31' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய், இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக சென்னையின்…
Read More
மாஸ்டர் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார்!

மாஸ்டர் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார்!

கோலிவுட்டின் மூத்த நடிகர் விஜய்குமார் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமாகிய ஆர்ணவ் விஜய், பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய மிகப்பெரும் ஆச்சர்யம் யாதெனில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார் என்பது தான். இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது... இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி…
Read More
நடிகர் அருண் விஜயின் மகன் ஆர்னவ் விஜய்-யை ஹீரோவாக ஆக்குகிறார் சூர்யா !

நடிகர் அருண் விஜயின் மகன் ஆர்னவ் விஜய்-யை ஹீரோவாக ஆக்குகிறார் சூர்யா !

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார். படம் குறித்து சரோவ் சண்முகம் கூறியதாவது... குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் 2D Entertainment நிறுவனம் எப்போதும் அழகான கருத்துள்ள குடும்ப படங்களை உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம்…
Read More
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இந்த ஒற்றை படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் பிரபாஸ். இதனால் பாகுபலி வெற்றிக்கு பின் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அடுத்ததாக சாஹோ என்கிற படத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி வேடம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இந்த தகவலை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சாஹோ படத்தில் தாம் இணைவது தமக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி கெட்டப் என கூறப்படுவதால் அதற்கு இணையான வில்லன் கெட்டப்பில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
Read More