அகத்தியா படத்திற்காக உருவான கேம் ஆப் !!

அகத்தியா படத்திற்காக உருவான கேம் ஆப் !!

தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் கூறியதாவது.., “இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை…
Read More
ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா” !!

ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா” !!

  டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா". "ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது - நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு…
Read More
“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”  ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா

“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா

மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்…
Read More
இரும்புத்திரை ரிலீஸின்போதுதான் பணத்தை அருமையை உணர்ந்தேன்! – விஷால் பேச்சு

இரும்புத்திரை ரிலீஸின்போதுதான் பணத்தை அருமையை உணர்ந்தேன்! – விஷால் பேச்சு

கோலிவுட்டில் ஒற்றை ஆளாய் அதகளம் செய்து கொண்டிருக்கும்  விஷாலுக்கு சொந்தமான சொந் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத் திரை “ ... இதில் விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி  வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார். விழாவில் விஷால் பேசியது :-        இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு…
Read More
அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லி விடவா’

அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லி விடவா’

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார்.  தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை காணாத வகையில், ஒரு முற்றிலும் புதிய பின்னணியில் இந்த கதை பயணிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம் வெகு நேர்த்தியாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறது. ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின்…
Read More
’ நிபுணன்’ படத்தில் நடிச்ச அனுபவம்! – ஸ்ருதி ஹரிஹரன் மகிழ்ச்சி!

’ நிபுணன்’ படத்தில் நடிச்ச அனுபவம்! – ஸ்ருதி ஹரிஹரன் மகிழ்ச்சி!

மக்களால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல வாய்ப்புகளை பெற்று தரும். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' படத்தில் அவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பாராட்டு பெற்றுள்ளனர். அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன். 'நிபுணன்' குறித்து ஸ்ருதி ஹரிஹரன் பேசுகையில், '''நிபுணன்' படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு 'நிபுணன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை கண்டதில் எனக்கு பெருமை. இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான மனைவியாக, அவருக்கு நேரிடும் தொழில் சார்ந்த நெருக்கடிகளையும் உடல்நலம் சார்ந்த திடீர் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும்…
Read More
நிபுணன் படத்தில் நடிக்க தயங்கினேன்! – பிரசன்னா ஓப்பன் டாக்!

நிபுணன் படத்தில் நடிக்க தயங்கினேன்! – பிரசன்னா ஓப்பன் டாக்!

பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷய மாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா. Action king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் "நிபுணன்". இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ' இந்த ‘நிபுணன்' பட குறித்து பிரசன்னா பேசுகையில், ''இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்திய நாதன் எனது நீண்ட நாள் நண்பர். ஆரம்பத்தில் இதில் நடிக்க தயங்கினேன் . பின்னர் கமிட் ஆகி நடித்து முடித்து இப்போப் பார்த்தால்  'நிபுணன்' ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. இதை நீங்களே படம் பார்க்கும்…
Read More