09
Mar
தயாரிப்பு : லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் நடிகர்கள் : சார்லி, பவன், மேக்னா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் மற்றும் பலர். இயக்கம் : ரமேஷ் கந்தசாமி கரு. பழனியப்பனின் உதவியாளர் ரமேஷ் கந்தசாமி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் 'அரிமாபட்டி சக்திவேல்'. தமிழகத்தின் கிராமம் ஒன்றில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி இருக்கிறது இப்படம். சாதிய ஒடுக்குமுறைகளை பற்றி பேசும் இப்படம் ரசிகர்களைக் கவரும்படி இருக்கிறதா ? திருச்சி அருகே அருகே அரிமாபட்டி என்ற ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் நயாகன் சக்திவேல்(பவன்) வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலிக்கிறான். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்புக் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி நாயகன் சக்திவேல் நாயகி (மேகனா) வை வெளியூருக்கு கூட்டி சென்று மணமுடிக்கிறார். இதன் பிறகு கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்த…